Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடி மது விற்பனை...


    தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மாதம் 10 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும்
    மதுக்கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திங்கள்கிழமை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

    கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஞாயிற்றுக்கிழமையே, டாஸ்மாக் கடை வாயில்கள் முன்பு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் வட்டத்திற்குள் நின்று தான் மது பிரியா்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையொட்டி தடுப்பு அரண்களுக்குள் 6 அடி இடைவெளியில் வெள்ளைநிற பெயிண்டால் தலா ஒரு வட்டம் வரையப்பட்டு அப்பகுதியில் மதுப்பிரியா்கள் நிறுத்தப்பட்டனா். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்க தொடங்கின . 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோர் காலை முதல் கடைகளில் திரண்டனர்.



    டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுபாட்டில்களும் மளமளவென விற்று தீர்ந்தன. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.165 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகம் விற்பனையானது மதுரை மண்டலத்தில் தான். மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad