Header Ads

  • சற்று முன்

    17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாக உள்ளது - ஜகமே தந்திரம்...


    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜுன் 18ஆம் தேதி வெளியாகவுள்ள ' ஜகமே தந்திரம் ' திரைப்படம் வரும் ஜீன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படம் 
    தமிழ், ஆங்கிலம்  உட்பட 17 மொழிகளில் 190 நாடுகளில், தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் வெளியாகிறது என ’ஒய் நாட் ஸ்டுடியோஸ்’  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கேங்க்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.சுருளி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் திரைப்டத்தின் எட்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது.


    இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ’ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சார்பில் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad