Header Ads

  • சற்று முன்

    17 வயது சிறுமியை மாடியில் இருந்து வீசிய 3 இளைஞர்கள் - பதபதைக்கும் சிசிடிவி காட்சி...


    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், பெற்றோர் கண்முன்னே 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள், இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். மேலும் அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும், முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    தற்போது சிறுமி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில், “ தங்களது குடியிருப்புக்கு அருகில் வசித்து வரும் 3 இளைஞர்கள், நீண்ட நாட்களாகவே எனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். திங்கள்கிழமை இரவு ஒருவர் எனக்கு ஃபோன் செய்து, என் மகளிடன் பேச வேண்டும் என்று கூறினார். நான் மறுத்துவிட்டேன். அதற்கு அந்த  இளைஞர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இரவு 8 மணிக்கு, 3 இளைஞர்களும் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். பின் தூக்கிச்செல்ல முயன்றனர். குடும்பத்தினர் அனைவரும் கூச்சலிட்டதால், எனது மகளை 2ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். “ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வந்த போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad