Header Ads

  • சற்று முன்

    +2 பொதுத்தேர்வு - பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

     


    கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  இந்த ஆண்டு மே மாதம் நிச்சயமாக நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி அதற்கு முட்டுக்கட்டையாகிவிட்டது.

    இதனிடையே சிபிஎஸ்இ, 12-ம் வகுப்பு பொது தேர்வு குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மாணவர்களின் நலனுக்காக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.  இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ஆலோசனைக்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உடன் இரண்டு நாட்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன


    இதனால், 12-ம் வகுப்பு தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு +2 தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிற மாநிலங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்து 2 நாட்களில் முடிவெடுக்கப்படும்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad