Header Ads

  • சற்று முன்

    அனைத்து வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படும் 2-டிஜி மருந்து..


    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

    டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக அது உதவும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்கள் முன்னதாகவே குணமாகுவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

    தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் என கூறி வந்த நிலையில் தற்போது இந்த மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து உருமாறிய வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.



    இதனையடுத்து கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம் எனவும், இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருப்பதை குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


    இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த 2-டிஜி மருந்து செயல் திறன் மிக்கதா என அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அதில், இந்த 2-டிஜி மருந்து, கொரோனாவின் அனைத்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் மறுஆய்வு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad