Header Ads

  • சற்று முன்

    ”பிசாசு 2”- நடிகை ஆண்ட்ரியாக்கு தேசிய விருது...இயக்குனர் மிஷ்கின் உறுதி..


    இயக்குனர் மிஷ்கின் சைக்கோ, துப்பறிவாளன்  என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது

    இதனை தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். 


    மேலும் பிசாசு 2  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. , விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய மிஷ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடிப்பை பற்றி பேசியுள்ளார். அதில் " பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளார். நிச்சயம் இந்த ஆண்டு அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்குவார்" என்று கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad