Header Ads

  • சற்று முன்

    துப்பாக்கி - 2 படத்தில் நடிகர் விஜய் - க்கு பதில் இந்த ஹீரோவா...


    விஜய் நடிப்பில்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இதில் நடிகை காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது
    .

    அதனைத் தொடர்ந்து கத்தி, சர்க்கார் படங்களை முருகதாஸ் இயக்கினார். ஆனால் இந்த இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின. சர்க்கார் படப்பிரச்சனை நீதிமன்றம் வரைச் சென்றது . இந்நிலையில் முருகதாஸின் கடைசிப் படம் தர்பாரும்  ணிக ரீதியாக  பரவாயில்லை என்றாலும், படைப்பு ரீதியாக படம் யாரையும் கவரவில்லை.

    இந்நிலையில் தற்போது துப்பாக்கி 2 படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் தயாராகி வருவதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமலஹாசன்  நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இயக்குனர் முருகதாஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad