Header Ads

  • சற்று முன்

    ”கேல் ரத்னா விருது” தமிழ்நாட்டை சேர்ந்த 2 வீரர்களுக்கு பரிந்துரை..


    மறைந்த ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாள் 2012ஆம் ஆண்டிலிருந்து தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. அவரின் 114ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் விளையாட்டில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, அர்ஜூனா விருது உட்பட பல விருதுகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில், உயரிய விருதான கேல் ரத்னா விருது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் 1991ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேல் ரத்னா விருது வாங்கும் வீரர்களுக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவார்.


    மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளையாட்டு வாரியங்களிடம் கேட்டிருந்தது.அதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஐந்து பேரின் பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி மகளிர் கிரிக்கெட்டின் முடிசூடா அரசி மித்தாலி ராஜ், ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கும் ஷிகர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு அர்ஜூனா விருதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


    இதில் அஸ்வின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என அனைவரும் அறிவர். மித்தாலி ராஜும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் தான். கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டிருந்தது. அவருடன் மானிகா பத்ரா, வினேஷ் போகட், ராணி ராம்பால் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது. மிக முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தான் வரலாற்றிலேயே ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கியது முதல் முறையாகும்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad