Header Ads

  • சற்று முன்

    இன்னும் 2 நாட்களில் ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படும்...


    கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் தங்களின் பெயர்களை ’கோவின்’  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 9 மொழிகள் மேலும்  சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி மீண்டும் புறக்கணிக்கப்பட்டது.

    இதனிடயே, தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், ’கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழியை இணைக்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான ’கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இன்னும் 2 நாட்களில் தமிழை இணைக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad