Header Ads

  • சற்று முன்

    புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து...

    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.  மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் விரைவில் வெளியிடவுள்ளது.

    இந்நிலையில், தமிழக பாடத்திட்டங்களே புதுச்சேரியிலும் பின்பற்றப்படுவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    மேலும், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad