Header Ads

  • சற்று முன்

    ஜூன் 3 ஆவது வாரத்தில் +1 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்.. எப்படி மாணவர்களை சேர்க்கனும்னு தெரியுமா???

     


     ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யபட்டதால் இந்த கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு  மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் கூடுதலாக 10 - 15 %  வரை இடங்களை அதிகரித்து சேர்க்கையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 50 கொள்குறிவகை வினாக்கள் தயாரித்து தேர்வு  வைத்து சேர்க்கை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

     எந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த பிரிவுடன் தொடர்புடைய பாடங்களில் இருந்தும், கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்தும் கேள்விக்குறி வகை வினாக்களாக கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரிவுகள் ஒதுக்கலாம். இதே வாழிகாட்டுதலின் படி பன்னிரண்டாம் வகுப்பு சேர்க்கையையும் நடத்தலாம். ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து பதினோராம் வகுப்புகளை தொடங்கி தொலைத் தொடர்பு முறையில் பாடங்களை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad