Header Ads

  • சற்று முன்

    சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு....


    உத்திரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திக்கிரி கிராமத்தில்  திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதால் அருகருகே இருந்த 2 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டார்கள். 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கும் நிலையில், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் நிசார் அகமது (35), ரூபினா பானோ (32), ஷம்ஷாத் (28), சைருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சபா (12), மேராஜ் (11), முகமது ஷோயாப் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மிஸ்ரா கூறுகையில், சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அடைந்தனர். தடயவியல் குழுக்கள் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad