Header Ads

  • சற்று முன்

    தன் மகனுக்கு மருந்து வாங்க 300 கி.மீ சைக்கிளில் பயணம் செய்த தந்தை..


    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில் நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது. மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும் இவரது மகனை இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் அழைத்து வர வேண்டும் என்றும் மகனுக்கு 18 வயதாகும் வரை மருந்துகளை ஒரு நாள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. நாள் தவறாமல் மகன் மருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக மைசூரில் உள்ள கடைகளில் கேட்டு பார்த்துவிட்டார். மருந்து எங்கும் கிடைக்காததால், மகனின் நலனுக்காக பெங்களூர் செல்ல சைக்கிளில் பயணித்தார். 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சைக்கிளில் வெகுதூரம் பயணித்து வந்த இவரை பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்து போயினர். அதனால் ஆனந்தின் நிலையை பார்த்த மருத்துவர்கள் மகனுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பியதோடு மேலும் 1000 ருபாய் செலவுக்காக கொடுத்தனுப்பியுள்ளனர். அதாவது மொத்தம் 300 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் சொல்லும்போது, "ஒருநாள்கூட மாத்திரைகள் தவறகூடாது என்று டாக்டர்கள் சொன்னார்கள்.. அதனால்தான் பெங்களூர் வரை சென்றேன்.. கஷ்டப்பட்டாலும் என் மகனுக்கு மருந்து வாங்கிட்டேன்" என்று பூரித்து சொல்கிறார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad