Header Ads

  • சற்று முன்

    3 மணி நேரம் அறுவை சிகிச்சை..கிரிக்கெட் பந்து அளவிற்கு கருப்பு பூஞ்சை அகற்றம்...


    பீகாரில் அனில் குமார் என்பவர் சமீபத்தில்தான் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்தார். ஆனால், கடந்த சில தினங்களாக  அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவர்கள் 60 வயதான அனில்குமாரின் மூளையில் இருந்து மியூகோமிகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சையை வெற்றிகரமாக அகற்றினர்.

    மேலும் அகற்றப்பட்ட கருப்பு பூஞ்சையின் அளவு கிரிக்கெட் பந்துக்கு சமமானது என்றும், டாக்டர் பிரஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவக்குழு 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.ஜி.ஐ.எம்.எஸ்ஸின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மனிஷ் மண்டல், 'கருப்பு பூஞ்சை மூக்கு வழியாக குமாரின் மூளைக்குள் நுழைந்தது, ஆனால் அவரது கண்களுக்கு பரவவில்லை. இதன் காரணமாக, அறுவை சிகிச்சையின்போது அனில் குமாரின் கண்கள் பாதிப்பில்லாமல் இருந்தன. இதேபோன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையான நோயாளிகளின் கண்களை மருத்துவர்கள் அகற்ற வேண்டியிருக்கிறது' எனத் தெரிவித்தார். இந்நிலையில்,பீகாரில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மியூகோமிகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


    கோவிட் -19 பாதித்த நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகளிடையே இந்த நோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. பீகார் மருத்துவர்கள் மியூகோமிகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு இருக்கும் கடுமையான பற்றாக்குறை குறித்து புகார் அளித்து வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad