Header Ads

  • சற்று முன்

    கொரோனா 3 ஆம் அலை வந்தாலும் அது குழந்தைகளை அதிகம் பாதிக்காது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை


    நாட்டில் கொரோனா 2 வது அலை அதி தீவிரமாக பரவிய  நிலையில், தற்பொழுது ஊரடங்கால் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குப் பின்பு கொரோனாவின் 3 ஆம் அலை இந்தியாவில் தொடங்கும் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த 3 ஆம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சில மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். மாநிலங்களில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரண்டு வயது முதல் 15 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் என 4500 க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் வியக்கத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளதாம். குழந்தைகளின் செரோ அளவு 55.7 %, பெரியவர்களின் செரோ விகிதம் 63.5 % ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    மேலும் புள்ளிவிபர ரீதியாக அதிகளவில் வேறுபாடு இல்லாவிட்டாலும், செரோ விகிதம் அதிகமாக குழந்தைகளிடம் இருப்பதால் பெரியவர்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனாவின் 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad