Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சி - ஆட்டோ மீதி லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...


    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கள்ளக்குறிச்சி ஆலத்தூர் இந்தியன் பேங்க் அருகில் இன்று மதியம் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி  சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று  சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால்  மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்புறம் மோதிய ஆட்டோ, அதன் சக்கரத்தில் சிக்கி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.


    இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (35), ஆட்டோவில் பயணம் செய்த சரவணன், ராஜேந்திரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பாக லாரி சக்கரத்தில் சிக்கிய மணிகண்டனின் உடல் துண்டு துண்டாக சிதறியது. ராஜேந்திரன் என்பவர் ஆலத்தூர் கிளை கழக செயலாளர், கள்ளக்குறிச்சி ஒன்றிய அமமுகவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளன.


    விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், மூவரது உடலையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad