Header Ads

  • சற்று முன்

    ரூ.50 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு...


    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டியில் டாஸ்மாக் உள்ளது. ஊருக்கு வெளிப்புறமாக உள்ள இந்த கடையின் விற்பனையாளர், பாதுகாப்பிற்காக இரவில் கடையில் தங்குவார். 

    இதனிடயே நேற்று முன்தினம் இரவு மழை காரணமாக விற்பனையாளர் வரவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை இவ்வழியாக வந்தவர்கள், டாஸ்மாக் கடை பூட்டு உடைந்திருப்பதை பார்த்து, டாஸ்மாக் கண்காணிப்பாளர் சுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகார்படி, ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், டாஸ்மாக் கடையிலிருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. 

    மேலும், மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை சாலையோரம் வீசி சென்றுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுபோல், சேலம் சாலையில், தனியார் பள்ளி எதிரே இருந்த, மூன்று மளிகை கடையிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad