Header Ads

  • சற்று முன்

    பறந்து கொண்டிருந்த ஏர் பலூனில் திடீரென தீ பற்றியது..5 பேர் பலி..


    அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஆல்புகெர்க்கி என்னும் நகரம் உள்ளது.  இந்த நகரம் வண்ண  பலூன்களுக்கு பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலா நகருக்கு இதற்காகவே ஏராளமானோர் வருவது உண்டு. 
    இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை 7 மணியளவில் ஏராளமானோர் வண்ணப் பலூன்களில் பறந்து கொண்டிருந்தனர். 

    அப்போது ஒரு பலூனில் ஒரு விமானி, 2 பெண்கள் உட்பட 5 பேர்  இருந்தனர். அவர்கள் அனைவரும் 40 முதல் 60 வயதை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இவர்களின் பலூன் உயரமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்தப் பலூன், மின் கம்பிகளில் மோதி தீப்பிடித்தது. இதையடுத்து கூடை தனியாவும் பலூன் தனியாகவும் பிரிந்து கீழே விழுந்தது. ஆல்புகெர்க்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த பலூன் விழுந்ததில், அதில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தார். 

    இறந்தவர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள 13 ஆயிரம் வீடுகள், வணிக நிறுவனங்களில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad