Header Ads

  • சற்று முன்

    மாஸ்டர் முதலிடம், கர்ணன் 6 வது இடம் பிடித்துள்ளது..


    பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபி ஆண்டு தோறும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை வெளியீடுகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டின் 2021  பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.


    1. மாஸ்டர்

    2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

    3. தி வைட் டைகர்

    4. த்ரிஷ்யம் 2

    5. நவம்பர் ஸ்டோரி

    6. கர்ணன்

    7. வக்கீல் ஸாப்

    8. மஹாராணி (வெப் சீரிஸ்)

    9. க்ராக்

    10. தி கிரேட் இண்டியன் கிச்சன்


    இந்தப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியான அடுத்த 4 வாரங்களில், அந்தந்த படைப்புகளில் பக்கங்கள் அதிக பார்வைகளை ஈர்த்துள்ளது. இந்த அத்தனை படைப்புகளுமே 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீடைப் பெற்றுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad