Header Ads

  • சற்று முன்

    மேகி உட்பட 60% உண்வுபொருட்கள் உடலுக்கு தீங்கானது ...நெஸ்ட்லே நிறுவனம் ஒப்புக்கொண்டது...


    உலகின் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனம் நெஸ்ட்லே. இருப்பினும் தரம் குறித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஆனாலும் அந்த நிறுவனத்தின் மேகி நூடுல்ஸூக்கு குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர்.

    இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேகியில் காரியம் அதிகம் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியா முழுவதும் மேகிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு நிறுவனம் தயாரிப்பில் மாற்றம் செய்து அறிக்கை அளித்ததை அடுத்து தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனிடையே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.  நெஸ்ட்லே தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்தனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 % உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.



    ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு அமைப்பு உணவுகளின் ஆரோக்கியத்தை 5 ஸ்டார் முறையில் மதிப்பீடு செய்கிறது. 3.5 ஸ்டாரோ அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டார்களை பெறும் உணவுகள் மற்றும் பானங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு மதிப்பீடு செய்ததில் நெஸ்லேவின் 90 % பானங்களைச் சேர்த்து மொத்தமாக 70 % தயாரிப்புகள் 3.5 ஸ்டாரை பெற தவறவிட்டன. இதில் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள், மருத்துவம் சார்ந்த சிறப்பு ஊட்டச்சத்து பொருட்கள், தூய்மையான காபி உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே 3.5 ஸ்டாருக்கு மேல் பெற்று தகுதிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


    தற்போது அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad