Header Ads

  • சற்று முன்

    இந்தியா முழுவதும் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழப்பு - இந்திய மருத்துவ கவுன்சில்


    கொரோனாவின் 2 வது அலை நாட்டையே புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை முதல் அலையை விட  2 வது அலை அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு கடும் சவாலான பணியாக இருக்கிறது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களும் இந்த தொற்று பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்தபடி இருக்கிறது. கொரோனா முதல்  அலை பரவலின் போது நாடு முழுவதும் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். 

    இந்நிலையில் 2 வது அலையில் நாடு முழுவதும் இதுவரை 646 மருத்துவர்கள் கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் டெல்லியில் அதிகப்பட்சமாக 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 97 மருத்துவர்களும் உத்தரபிரதேசத்தில் 79, ராஜஸ்தானில் 43, ஜார்கண்ட்டில் 39, குஜராத்தில் 37, ஆந்திரா, தெலங்கானாவில் தலா, 35, 34 மற்றும் மேற்கு வங்கத்தில் 30 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad