Header Ads

  • சற்று முன்

    ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி வருவதாக தகவல் - மா. சுப்பிரமணியம்..


    கொரோனா 2 வது அலை தற்போது குறைந்து வருகிறது. கொரோனவை வெல்லும் ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில் அதனை செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றன. இந்நிலையில்,  
    தமிழகத்தில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. தடுப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக சென்னையின் பல முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் செல்வது வேதனை அளிப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

    தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, 2 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இன்று மாலை 5 மணிக்கு அவை சென்னை வர உள்ளன.  ஒருநாள் தேவைக்கே போதுமானதாக இருக்காது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.


    இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுவரை 1.44 கோடி கொரோனா தடுப்பூசி பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad