Header Ads

  • சற்று முன்

    ரூ.75 கோடி சம்பளமா.!! 2 ஆண்டுகளில் 5 படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் - சிவகார்த்திகேயன்


    சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் 'மெரினா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் இதுவரை 14 படங்களில் நடித்திருக்கிறார்.இதில்  பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

    இதில் டாக்டர் படம் மார்ச் 26  ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்  கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். விஜய் டிவி பிரபலங்கள் ஷிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


    தற்போது  சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அடுத்த 2 ஆண்டுகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக 5 படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், இதற்காக மொத்தமாய் ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதில் 70 கோடி கடனுக்கே போய்விடும் என்று கூறப்படுகிறது. கடன் சூழலில் இருந்து வெளிவர இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் இதற்கு உடனடியாக ஒப்பந்தம் தெரிவித்திருக்கிறார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad