Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளமா..!!


    தமிழகத்தை சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபபெட்டின் தலைமைப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.மதுரையில் பிறந்து சென்னை அசோக் நகரில் வளர்ந்த சுந்தர் பிச்சை வீட்டில் ஆரம்பத்தில் டிவி இல்லை. கம்ப்யூட்டரை அவர் அமெரிக்கா போகும் வரை பார்க்கவிலாலை. அமெரிக்காவில் கடினமான பொருளாதார சூழலும் படித்து, கூகுளில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு எல்லோரையும் போல் சாமானியராக வேலையை செய்துவிட்டு வந்தவிடவில்லை. தனது புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் மெனக்கிட்டார். அவர் மெனக்கெட்டு உருவாக்கிய கண்டுபிடிப்பு கூகுள் குரோம்.

    இந்நிலையில் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெறும் மென்பொருள் நிறுவன சி.இ.ஓக்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஸூக்கர்பெர்க் இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.8 ஆண்டுகளில் அதாவது 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பங்குகள் மற்றும் பணமாக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது . கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனங்களில் சிஇஓ சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறார் .2015 முதல் 2020 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு பங்குகள் , இழப்பீடுகள் , ஊதியம் என இந்த தொகை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது .


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad