Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் அதிகரிக்கும் டெல்டா பிளஸ்.. 9 பேருக்கு தொற்று..


    இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
     இந்நிலையில் நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 48 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உள்ளது. 

    கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த பிறகு குணமடைந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த வகை வைரஸ், வேறு மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். டெல்டா ப்ளஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை பரி சோதனைக்கு உட்படுத்தினோம். அப்போது இது மிகப்பெரிய நோய் பரவலை ஏற்படுத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad