Header Ads

  • சற்று முன்

    நாமக்கள் மாவட்டத்தில் காற்றில் பறக்கும் கொரோனா ஊரடங்கு....


    நாட்டில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பல உயிர்கள் மடிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு பலனாக தற்போது கொரோனா வேகம் சற்று குறைந்து வருகிறது.ஆனால் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. 

    இதனிடையே கொரோனா ஊரடங்கில் நாமக்கல் மாவட்டத்திற்கு  தளர்வு அளிக்கப்படவில்லை. ஆனால், ராசிபுரம் பகுதியில், உள்ள பெரும்பாலான கடைகள் மதியம், 2:00 மணி வரை திறக்கப்பட்டுள்ளன. முக்கியமாக மொபைல், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், மதியம் வரை கடைவீதி, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    மேலும் நகர் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், கிராமங்களில் இருந்து அதிகளவு மக்கள்  இருசக்கரவாகனம் மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர். போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்கள் நடமாட்டத்தை குறைக்க முடியும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad