Header Ads

  • சற்று முன்

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி..


    கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2 வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனால் தினசரி பாதிப்பு 306-ஆக குறைந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில்,  தொற்று ஏற்பட்டிருப்பது இன்று காலை தெரிய வந்தது. தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் படி ஆட்சியர் முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தமிழகத்தில் கொரோனா 2 வது அலை குறைந்து வரும் நிலையில் முன்கள பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் ஆட்சியர் சாந்தா, பெரம்பலூர் எஸ்.பி நிஷ பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad