Header Ads

  • சற்று முன்

    முப்பதாயிரம் மருந்து குப்பிகளை வழங்குமாறு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்....


    நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை பரவி வரும் நிலையில் அதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை என்னும் நோய் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் 
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர்கள், கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்துள்ளார். 

    இந்நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை மத்திய அரசால் 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது அதிகரித்துவரும் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் மருந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad