Header Ads

  • சற்று முன்

    பிரதமர் மோடியின் இல்லத்தில் முதல்வர் சந்திப்பு...


    தமிழக முதலமைச்சராக  மு.க.ஸ்டாலின் முதன்முறையாக இன்று டெல்லிக்கு சென்றுள்ளார். காலை 7 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம்  டெல்லிக்குப் புறப்பட்டார். மேலும், ஸ்டாலினின் வருகையை ஒட்டி ட்விட்டரில் #delhiwelcomesstalin என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. டெல்லி சென்றடைந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கார் மூலம் டெல்லி ஓடிஐஎஸ் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அறிவாலயம் கட்டிட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நேராக முதல்வர்கள் தங்கம் இல்லத்திற்கு சென்ற அவர் மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளன. அதன் படி, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக சரியாக 4.45 மணிக்கு முதல்வர் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

    இந்நிலையில், முதல்வர்  ஸ்டாலின் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்துள்ளார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். மேலும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளன.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad