Header Ads

  • சற்று முன்

    இ - பதிவு இணையதளம் முடங்கியது...சென்னையில் போக்குவரத்து நெரிசல்..


    தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பரகள், தச்சர்கள் போன்ற சுயதொழில் செய்வோருக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இ-பதிவு செய்துகொண்டு தொழில் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதல்  ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு இணையதளத்தில் குவிந்து பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக  கூடுதல் இ-பதிவுக்கு அனுமதி கொடுத்த சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. உள்ளே வந்தவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாதததால் ஏமாற்றமடைந்தனர்.  சென்னை வடபழனியில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.அதிக போக்குவரத்து நெரிசல் காரமாக இ-பதிவு சோதனை செய்யாமல் வாகனங்களை போலீசார் அனுப்பி வருகின்றனர். மின் ஆளுமைத்துறை அதிகாரிகள் தற்போது இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad