Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..


    தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    வடக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி. இது அதேபகுதியில் நீடிக்கிறது. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

    மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்க கடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும். இதேபோல் அரபிக் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad