Header Ads

  • சற்று முன்

    வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ? விரைவில் வெளியிடப்படும்..


    ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்கியுள்ளன. அந்த காட்சியை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன்  படமாக்க முடியும் . இந்நிலையில், கொரோனா பாதிப்பால் படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளன. எனினும் டப்பிங் உள்ளிட்ட பிற வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. 


    இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்படும் இந்த நேரத்தில் அப்டேட் கொடுப்பது சரியல்ல என்று போனி கபூர் அறிவித்தார். ஆனால் மீண்டும் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று  கேட்கத் தொடங்கிவிட்டார்கள். ஊரடங்கு முடிந்ததும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறந்த பிறகே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் . ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும்போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad