Header Ads

  • சற்று முன்

    ”மேகதாது அணை” கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்


    கர்நாடக அரசு மேகதாது 
     பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுகிறதா என ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தது. இந்நிலையில் மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தார். 

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முக ஸ்டாலின், "மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும். கர்நாடக முதல்வரின் அறிவிப்பு இரு மாநில நல்லுறவுக்கு உகந்த நிலைப்பாடு அல்ல. அவரின் அறிவிப்பு தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயல். மேகதாது அணை கட்டும் திட்டம் உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும். மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது" என வலியுறுத்தியுள்ளார்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad