Header Ads

  • சற்று முன்

    கொரோனா இன்றைய நிலவரம் - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ...


    தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும் கொரோனா நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில்  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 12,772பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,245பேர் ஆண்கள், 5,527பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 66 ஆயிரத்து 493ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 884ஆக அதிகரித்துள்ளது.
     தமிழகத்தில் 272 பரிசோதனை மையங்கள் உள்ளன.

    இன்று 254 பேர் உயிரிழந்துள்ளார். 108 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 146பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,801ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,561பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,99,808ஆக அதிகரித்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad