Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பாடகி ஷ்ரேயா கோஷல்...


    பிரபல
     பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார். நான்கு தேசிய விருதுகளையும் பல்வேறு மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ள ஸ்ரேஷா கோஷலின் இனிமையானக் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    பிப்ரவரி 5, 2015-ல் தொழிலதிபர் ஷிலாதித்யாவைக் காதல் திருமணம் செய்தார் ஷ்ரேயா கோஷல். இருவரும் 10 வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார்கள். கடந்த மே 22 அன்று ஷ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ்யான் எனக் குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார்கள்.இந்நிலையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார் ஷ்ரேயா கோஷல். இதுதொடர்பாக விடியோ வெளியிட்டு, இன்ஸ்டகிராமில் எழுதியதாவது:

    வீட்டில் தேவ்யான் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது உடனடியாக வெளியே வந்து கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் பரிந்துரைப்படி புதிய தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad