Header Ads

  • சற்று முன்

    ”உமா” எனும் ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்....


    தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் - பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கெளதம் கிச்லுவைத் திருமணம் செய்தார். ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்திருந்தார்.



    இந்நிலையில் ஹிந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் டதாகடா சின்ஹா இயக்கத்தில் உருவாகும் உமா படத்தை அவ்மா மீடியா, மிராஜ் குரூப் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மேலும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக மொத்தமாக காஜல் அகர்வால் கால்சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதால் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad