Header Ads

  • சற்று முன்

    போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்....


    தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண்களை போலீசார் விசாரித்தனர். அதில் ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


    போலீஸார் அவரை மாஸ்க் அணிய சொல்லும் போது.. மேலும் ஆத்திரத்தில் சத்தம் போட தொடங்கினார்.வழக்கறிஞர் எனக் கூறி ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை மிரட்டியதாக மீது புகார் கொடுக்கப்பட்டது. மேலும் கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad