Header Ads

  • சற்று முன்

    கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்...ஐசிஎம்ஆர் இயக்குனர் அறிவிப்பு..


    நாட்டையே அச்சுறுத்தி வரும்  கொரோனா இரண்டாவது அலை  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 18 வயது முதல் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. 

    கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத காரணத்தால் அவர்களை கொரோனா தாக்கும் அபாயம் ஏற்பட்டது. தற்போது பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில், இனி கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஐசிஎம்ஆர் இயக்குனர் டாக்டர் பலராமன் பார்கவா தெரிவித்துள்ளார்.கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனால் கர்ப்பிணிப் பெண்களில் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை நடைபெற்றும் வரும் நிலையில் செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad