Header Ads

  • சற்று முன்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ஃபேஸ்புக் கணக்குகள் இரண்டு ஆண்டுகள் நீக்கம் - ஃபேஸ்புக் நிறுவனம்


    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. ஆனால் டிரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கின.  ஆனால், இந்த முடிவு, ஃபேஸ்புக் மேற்பார்வை ஆணையத்தால் கடந்த மாதம் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில் 'டிரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்' என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டது. கடந்தாண்டு அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களை இது 'அவமானப்படுத்தும் செயல்' என்று டிரம்ப் இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதனால் ஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை படி வன்முறை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்துவது போல பதிவிடும் முக்கிய நபர்களின் கணக்குகள் ஒரு மாதம் அல்லது தீவிர வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் வரை சஸ்பெண்ட் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad