Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு அதிரடி உத்தரவு...மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு..!


    நேற்று தலைமைச் செயலர், காவல் உயர் அதிகாரிகள், சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பரவல் ஓரளவு குறைந்திருந்தாலும் மாவட்டங்களில் குறையாததைச் சுட்டிக்காட்டிய மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே  மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அளித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கு மாவட்டங்களில் கோவை திருப்பூர், ஈரோடு நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. தொற்று குறைவான பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வழங்கலாம் எனவும் சுகாதார துறை அறிவித்திருந்ததது,

    இந்நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad