Header Ads

  • சற்று முன்

    ரசிகர்கள் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்..”உங்கள் அன்பை இங்கே காட்டுங்கள் ” -நடிகை ராஷ்மிகா ட்விட்...


    பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் வெளியான ”கிரிக் பார்ட்டி” படம் மூலம் அறிமுகமானார்.  தற்போது டோலிவுட்டில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ”புஷ்பா” என்ற படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் பாலிவுட்டில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் “மிஷன் மஜ்னு”, அமிதாப்பச்சனுடன் ”குட் பை” ஆகிய படங்களில் நடிக்கிறார்.  

    நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.


    அதில், ”ரசிகர்களில் ஒருவர் என்னைத் தேடி அதிக தூரம் நடந்து என் வீட்டிற்கு சென்றதாக இப்போதுதான் அறிந்தேன். தயவு செய்து அப்படி யாரும் செய்ய வேண்டாம். நான் நிச்சயமாக உங்களை ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்கள் அன்பை இங்கே காட்டுங்கள். நான் மகிழ்ச்சியடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்தெலங்கானா ரசிகர் ஒருவர், கர்நாடகாவில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டே சென்றுள்ளார். சந்தேகப்பட்ட சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவரைத் தடுத்த போலீசார், கர்நாடகாவில் ராஷ்மிகா இருக்கும் பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது என்றும், அவர் இப்போது மும்பையில் இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து அந்த ரசிகர், சொந்த ஊர் திரும்பினார்.  தகவலறிந்த, ராஷ்மிகா மந்தனா இப்படி ட்வீட் செய்துள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad