Header Ads

  • சற்று முன்

    ”மாஸ்டர்” இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பதாக தகவல்...


    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இதனிடையே ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளும் படைத்தது. மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டாலும் வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த இந்தி ரீமேக்கை, கபீர்சீங், எண்டெமாஷைன் படத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


    இம்மாதிரியான ஹீரோயிசக் கதைகள் சல்மானுக்கு எப்பவுமே பிடிக்கும் என்றும், ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாறாக சல்மான் கான் நடிக்க ரீமேக் செய்தால் தமிழைப் போலவே பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளும் என்கிறது பாலிவுட்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad