Header Ads

  • சற்று முன்

    சென்னையில் நியாய விலைக்கடைகளில் முதல்வர் திடீர் ஆய்வு....


    தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7 ஆம் தேதி  பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அன்று முதல் பல நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், 14 மளிகை பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் இலவசம் என பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார்.

    தற்போது, தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாயும், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்புக்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு விரைவாக வழங்கும்படி, நியாய விலைக்கடை ஊழியர்களை அவர் அறிவுறுத்தினார்.

    பின்னர், பயனாளிகள் சிலருக்கும் நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad