Header Ads

  • சற்று முன்

    தமிழக- கேரள எல்லையோர மதுக்கடைகள் மூட உத்தரவு...


    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாததால் தொற்று அதிகம் உள்ள   மாவட்டங்களான கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட குடிமகன்கள் வேறு மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கோவை அருகே கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இவர்கள் நெடுஞ்சாலைகளில் வந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று கருதி, வனப்பகுதி வழியாக சென்று வருகின்றனர். எனவே கேரள - தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


    கோவையில் இருந்து வாளையார் வனப்பகுதி வழியாக கேரள மாநில கிராமங்களுக்குள் ரேஷன் அரிசியை கடத்தும் வழியை மதுகுடிப்போர் இப்போது பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இரு மாநில மக்களின் நலன்கருதி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இருமாநில எல்லையோர மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad