Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாட்டின் டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்....


    தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிகாலம் வருகிற நாளை 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை பொறுப்பான டிஜிபியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரயில்வே காவல்துறை தலைவராக தற்போது பணியாற்றி வரும் சைலேந்திரபாபு நாளை பொறுப்பேற்கவுள்ளார். 


    பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய சைலேந்திர பாபு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் பணியாற்றியவர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு 1987ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்தார். குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் விருது, வீரதீர செயலுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றவர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad