Header Ads

  • சற்று முன்

    பதவியேற்ற முதல் நாளிலே கொரோனா வார்டுக்குள் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்....


    தமிழகத்தில் கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து, பிரபு சங்கர் கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை உள்ளிட்டவை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து, பாதுகாப்பிற்காக கவச உடை அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள வார்டுக்கு சென்ற ஆட்சியர் பிரபு சங்கர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலனை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    அடிப்படையிலேயே மருத்துவரான ஆட்சியர் பிரபு சங்கர், பணியேற்ற முதல்நாளே கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது கரூர் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad