Header Ads

  • சற்று முன்

    சேலை அணிந்து ஸ்கேட்டிங் செய்யும் பெண்..இன்ஸ்டாவில் வைரல் வீடியோ...


    கனடாவின் டொராண்டோ பகுதியைச் சேர்ந்தவர் ஊர்பி ராய். 46 வயதான இவர் ஸ்கேட்டிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தன்னுடைய ஆசையை திருமணத்திற்கு பிறகு தான் தொடங்கியுள்ளார். இதை 'ஆண்டி ஸ்கேட்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கி பதிவிட்டி வருகிறார்.

    அந்தப் பக்கத்தில், "46 வயதான சேலையில் ஸ்கேட்டிங் செய்யும் ஆண்டி நான். எப்போதும் அன்பு மற்றும் பாசிட்டிவிட்டியை பகிர்பவள். இடீஸ் நெவர் டூ லேட் " என்ற வாசகத்தை வைத்துள்ளார். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 12 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்தப் பக்கத்தில் இவர் போடும் ஸ்கேட்டிங் வீடியோவை பலரும் பாராட்டி பதிவுகள் செய்து வந்தனர். 

    இந்தச் சூழலில் கடந்த 11ஆம் தேதி புடவையுடன் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. அதனை  70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்தும் பலர் இந்த பதிவிற்கு நல்ல கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்தப் பதிவு மிகவும் உத்வேகத்தை தருவதாகவும்,  நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் நம்மை சுற்றி நெகட்டிவ் செய்திகள் வலம் வரும் சூழலில் இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிவு பலரை ஈர்த்துள்ளது. சாதிக்க வயது தடையில்லை என்ற வாக்கியத்திற்கு ஊர்பி ராய் ஒரு சான்றாக உள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad