Header Ads

  • சற்று முன்

    மக்கள் அதிர்ச்சி..! சதம் அடித்த பெட்ரோல் விலை...


    பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருட்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும்  கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல்  விலை அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறது. தமிழகத்தில்  காட்டுமன்னார் கோவில், தருமபுரி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ண்கிரி, ராமநாதபுரம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மயிலாடுதுரை போன்ற பகுதிகளில் ரூ.100 -யை தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சிரமத்திற்கு ஆளாகின்றன.  தற்போது கொரோனா நெருக்கடியால்  இதுபோன்ற தொடர் விலையேற்றம்  பொது மக்களுக்கு வேதனையளிப்பதாக தெரிவிக்கின்றன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad