Header Ads

  • சற்று முன்

    ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது...


    சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது.
     இந்த திருட்டால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது .அதிலும் கொள்ளையர்கள் ஜப்பானை சேர்ந்த  (ஓ.கே.ஐ) என்ற நிறுவனம் தயாரித்த டெபாசிட் எந்திரங்களை கண்டறிந்து குறிவைத்துள்ளன.

    ஹரியானா மாநிலம் மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வங்கி கொள்ளை தொடர்பாக, விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சென்னையிலிருந்து தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

    ஏற்கனவே, மேவாட் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அவன் மூலம் கிடத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளன. குற்றவாளியை சென்னை கொண்டுவந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad