Header Ads

  • சற்று முன்

    ’ஜகமே தந்திரம்’ படத்தின் இசை வெளியீடு....

     


    தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. 

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

      இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பத்தில் 8 பாடல்களும் 3 தீம் மியூசிக்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஜகமே தந்திரம் படத்தின் இசை ஆல்பம் (ஜூன் 7ஆம் தேதி) இன்று வெளியாகும் என அறிவித்தார். அதன்படி படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad